31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

தைரியமிருந்தால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் – ரபிஸி ரம்லி சவால்

🔥 Views : 6
👁 Reading Now : 42

பிரதமர் துறை சிறப்புப் பிரிவின் அமைச்சர் அப்துல் லத்திப் அமாட்டின் இரண்டாவது மனைவி ஸைனாப் முகமட் சாலேயை ஒப்புக் கொள்ளாத அமைச்சர், அது நம்பந்தமாக தம்மீது மானநட்ட வழக்கைச் சுமத்தலாம் என்று பிகேஆர் துணைத் தலைவர் சவால் விடுத்தார்.
ஸைனாப்பின் அலிஸேஸ் மெரின் நிறுவனத்திற்கு போர்க் கப்பல் கட்டும் துணைக் குத்தகையை அப்துல் லத்திப் பெற்றுத் தந்துள்ளார். அந்த நிறுவனத்தில் அவரும் ஒரு பங்குதாரர் ஆவார்.
இயந்திர உதிரிப் பாகங்களைப் பெற்றுத் தரும் 210 மில்லியன் ரிங்கிட் குத்தகையைப் பெற்ற இந்த நிறுவனம், செய்யாத வேலைக்குப் பணத்தைப் பெற்று மோசடி செய்திருப்பதாக ரபிஸி ரம்லி குற்றம் சாட்டினார். இந்த விவரம் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனை அப்துல் லத்திப் மறுத்தால், அவர் தம்மீது வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்று ரபிஸி சவால் விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles