
15ஆவது பொதுத்தேர்தல் இவ்வாண்டு நவம்பர், டிசம்பருக்குள் நடைபெறும் சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. அது திட்டமிடப்பட்ட அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன்னதாகவே நடைபெறவிருக்கிறது. அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஆரூடம் கூறப்படுகிறது.
பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு இது ஒர் அறிகுறி என்றும் கருதப்படுகிறது.
அடுத்த மக்களவைக் கூட்டம் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி, 7ஆம் தேதி வரை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் வான் ஜுனைடி தெரிவித்த வேளையில், இன்று சனிக்கிழமை அம்னோ தொகுதித் தலைவர்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.



