
கிள்ளான் பாடாங் செட்டி பெயர் மாற்றத்திற்கு 7 இந்திய கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியில் அடிப்படை உண்மைகள் இல்லை என்று ஏழு இந்திய கவுன்சிலர்கள் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
கடந்த 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு பாடாங் செட்டி பெயர் மாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்தியக் கவுன்சிலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கு முன்பு நகராண்மைக் கழக கூட்டத்தில் இந்த பெயர் மாற்றம் குறித்து பேசப்படவில்லை மற்றும் விவாதிகப்படவில்லை . கடந்த மாதந்தர நகராண்மைக் கழக கூட்டத்தில்
மட்டுமே இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
இந்நிலையில் மீண்டும் நாளை நடபெறவிருக்கும் மாதந்தர நகராண்மைக் கழக கூட்டத்தில் எங்கள் எதிர்ப்பை மீண்டும் தெரிவிப்போம். பாடாங் செட்டி பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விவகரம் குறித்து நாடளமன்ற உறுப்பினர் YB சார்ள்ஸ் சாண்டியாகோ மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு YB Dr.குணராஜ், YB டோனி, YB அஸ்மிசம் அவர்களின் உதவிகளும் பெறபட்டுள்ளது.
இந்தியர்களின் குறித்த விவகாரங்களில் தங்கள் பங்கை தொடர்ந்து நிலைநிறுத்வோம் என்று அவர்கள் கூறினர்
