
வரும் பொதுத்தேர்தலில் பெரிக்காத்தானுடன் பக்காத்தான் ஒத்துழைக்க விரும்பவில்லை என்பது தலைமைத்துவ மன்றத்தின் முடிவே தவிர அது தம்முடைய முடிவல்லவென ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் தனது நிலையை வலுப்படுத்தி பொதுத்தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிடுவதாகவும், பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் இறுதி முடிவு தலைமைத்துவ மன்றத்தையே சாரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணியை எதிர்க்க வேண்டுமென அறைகூவல் விடுக்கும் முஹிடின், அக்கட்சி எம்பிக்கள் பலரை வளைத்துப் போட்டது ஏன் என ரபிஸி கேள்வி எழுப்பினார்.



