30.8 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

சிலாங்குர் குடிமக்களுக்கு வாழ்நாள் காப்புறுதித் திட்டம்

🔥 Views : 20
👁 Reading Now : 67

சிலாங்கூர் குடிமக்களுக்கு வாழநாள் முழுக்க பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை அதன் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்திட்டமானது பொது காப்புறுதித் திட்டம் போல இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் பெருந்தொற்று, பல பேரிடர்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர் குடிமக்கள் இதன் மூலம் சிறிது ஆறுதல் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டமானது 30 நாள் குழந்தையிலிருந்து 80 வயது முதியோர் வரை பாதுகாப்பு வழங்கும்.
ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தில் 65ஆவது மலேசிய தினத்தைக் தொடக்கி வைத்து உரையாற்றும்போது, அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் ஒருவர் சிலாங்கூரில் பிறந்தவராகவும் சிலாங்கூரில் வாக்காளராகவும் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகளில் ஒன்றை அவர்கள் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
திட்டத்தில் பதிவு செய்திருப்போர் விபத்தில் மரணமடைந்தால் கூடியபட்சம் ரிம. 10,000 வழங்கப்படும். மேலும், திட்டத்தில் பங்கு கொண்டோருக்கு நிரந்தர செயலிழப்பு அல்லது கை, கால்கள் இழந்தாலோ காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படும்.
இதற்கான பதிவு இவ்வாண்டு அக்டோபர் 1 லிருந்து தொடங்கும் என்றும் சிலாங்கூரின் குடிமக்கள் 6 மில்லியன் பேருக்கு காப்புறுதி வழங்க 6,000 ரிங்கிட்டை இத்திட்டம் உள்ளடக்கி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles