25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

கெடாவின் தண்ணீருக்கு பினாங்கு விலை கொடுப்பது தார்மீகக் கடமையாகும்

🔥 Views : 23
👁 Reading Now : 68

கெடாவின் ஆற்று நீரை பினாங்கு பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்துவது தார்மீகக் கடமையாகும் என சுற்றுச்சூழல், நீர்வள அமைச்சர் Tuan Ibrahim Tuan Man (துவான் இப்ராஹிம் துவான் மான்) தெரிவித்தார்.
சுங்கை மூடா ஆற்றிலிருந்து நீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்த பினாங்கிற்கு உரிமை உண்டு. எனினும் அந்த ஆறு மூடா காட்டிலிருந்து பாய்ந்து வருவதால், காட்டை அழிக்காமல் பாத்துக் கொள்ளவும் நீர் பிடிப்பு இடங்களைப் பராமரிக்கவும் கெடா அதிகமாகச் செலவிட வேண்டியிருப்பதாக துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
பினாங்கு கப்பளா பத்தாசில் இருந்து நீரை எடுத்து, பட்டர்வொர்த்தில் சுத்திகரிப்பு செய்து, தனது 1.78 மில்லியன் மக்களில் 80 விழுக்காட்டினருக்கு நீரை விநியோகம் செய்கிறது.
பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeoh (செள கோன் இயோ) வை தாம் இரு முறை சந்தித்துப் பேசினாலும், அவர் அதற்கு எந்தவொரு மறுமொழியையும் சொல்லாமல் இருப்பதாக துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles