25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

திரெங்கானுவில் யானைகள் அட்டகாசம்

🔥 Views : 20
👁 Reading Now : 44

திரெங்கானுவில் கிராமப் பகுதி ஒன்றில் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழை, தென்னை மரங்களை அழித்து துவம்சம் செய்தன.
Kampong Ayer Puteh (கம்போங் ஆயர் பூத்தே) கெமாமான் எனும் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் அதிகாலையில் நுழைந்த அந்த யானைகள் ஐநூறுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை அழித்தன.
பல தென்னை மரங்களையும் சேதப்படுத்தின என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். அதில் 3 விவசாயிகளின் தோட்டங்கள் முற்றாக அழிந்தன. இதனால் அவர்களுக்கு 30,000 ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தக் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டூழியம் புரிவது இது இரண்டாவது முறையாகும். கடந்தாண்டு அக்கிராமத்தில் புகுந்த யானைகள் நூற்றுக் கணக்கான வாழை மரங்களை அழித்துச் சேதப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles