25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

வழக்கை எதிர்நோக்குவோரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது

🔥 Views : 24
👁 Reading Now : 62

மோசடி, ஊழல் வழக்குகளை எதிர்நோக்குவோரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டுமென பாஸ் கட்சியின் சமய அறிஞர் குழு (உலாமா) வலியுறுத்தியுள்ளது.
வழக்கை எதிர்நோக்கும் அத்தகைய நபர்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின்னர், அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்காமல் இருப்பதை அது உறுதி செய்யும் என்று அப்பிரிவின் தலைவர் Ahmad Yahya (அமாட் யாஹ்யா) தெரிவித்தார்.
கட்சி தாவல் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளையில், பணக் கலாச்சாரத்தைக் தடுக்கும் சட்டத்தையும் இயற்ற வேண்டுமென்றும் உலாமா குழு கேட்டுக் கொண்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles