
தங்கள் மீது சுமத்தப்பட்ட 3 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்த்து எதிர்வாதம் புரிய சபா துணை முதல்வர் Bung Mokhtar Radin (புங் மொக்தார் ராடின்), அவரது துணைவியார் Leesi Ishad Abdul Samad (ஸீலி இசட் அப்துல் சமாட்)டையும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரொஸினா அயோப் உத்தரவிட்டார்.
Felcra (பெல்க்ரா) நிறுவனத்தில் அதிகாரமற்ற தலைவராக இருந்தபோது புங் மொக்தார், 2015 ஜூன் 12ஆம் தேதி Abul Hamid (அப்துல் ஹமிட்) என்பவரிடமிருந்து 22 லட்சத்தையும் Public Mutual (பப்ளிக் மியூச்சுவல்) நிதியத்தின் பணம் 262,500ஐயும் அதன் பின்னர் 377,500ஐ நோஹலி அமாட் எனும் முகவரிடமிருந்து பெற்றுக் கொண்டதாகவும் அந்தப் பணம் யாவும் புங் மொக்தாரின் மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அரசுத் தரப்பு இக்குற்றங்களை சந்தேகமின்றி நிரூபித்துள்ளதால், புங் மொக்தார் தம்பதியர் எதிர்வாதம் புரிய நீதிபதி உத்தரவிட்டார்.
