25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மலேசியர்களை விரட்டியடிக்க முயற்சி போலீசில் புகார் செய்யப்பட்டது!

🔥 Views : 10
👁 Reading Now : 67
To listen this news in Tamil, Click play button

மே 13ஆம் தேதி திருச்சியிலிருந்த கோலாலம்பூர் வந்து சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மலேசிய பிரஜைகள் இஸ்தானா தங்கும் விடுதியில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.
ஒரு நாளைக்கு 150 வெள்ளி செலுத்தி உள்ளனர். மூன்று முறை மருத்துவ சோதனையில் யாருக்கும் நோய்த்தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கூடுதல் கட்டணத்தை கட்டும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களில் வசதி குறைந்த மக்களும் உள்ளனர். அவர்கள் சிரமப்பட்டு 14 நாட்களுக்கு கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
மேலும் ஏழு நாட்களுக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்தும்படி யாரும் அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் இவர்களை தங்குவிடுதியில் இருந்து விரட்டி எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் என் உதவியுடன் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை போலீசார் மிகக்கடுமையாக கருத வேண்டும். இவர்களை விரட்டியடிக்க முயற்சிகளை மேற்கொண்ட தரப்பினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles