30.5 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

மூடாவை பக்காத்தானில் சேர்ப்பது பற்றி முடிவு செய்யப்படும்
-அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

🔥 Views : 32
👁 Reading Now : 62

மூடா கட்சியைப் பக்காத்தானில் சேர்த்துக் கொள்வது பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் என்று அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். தலைமைத்துவ மன்றம் கூடி அதனை முடிவு செய்யும் என்று மூடா ஏற்பாடு செய்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அன்வார் இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே, மூடா எதிர்பார்க்கும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் 15 தொகுதிகளுக்குப் பதிலாக கிளந்தான், பகாங், திரெங்கானு, சபா, சரவாக்கில் அது போட்டியிட வேண்டுமென பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஹலிமி அபு பாக்கார்
கேட்டுக் கொண்டார். மேலும், அது வாரிசானுடனான உறவைத் துண்டித்துக் கொண்ட பின்னரே,
பக்காத்தனுடன் சேரும் வாய்ப்பைத் தேட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles