28.8 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

9 கோடி ரிங்கிட்டை சட்டவிரோதமாகப் பெற்ற ஹாடி அவாங் மீது போலீஸில் புகார்

🔥 Views : 23
👁 Reading Now : 51

நஜிப் ரசாக்கிடமிருந்து சட்ட விரோதமாக 9 கோடி ரிங்கிட்டைப் பெற்ற பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீது ஜசெவின் தலைவர்கள் போலீஸ் புகாரை அளித்துள்ளனர்.
அந்தப் புகாரை ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் சைலீனா ரஷிட், புக்கிட் குளுகோர் எம்பி ராம் கர்ப்பால் சிங், ஜெலுத்தோங் எம்பி ஆர் எஸ் என் ராயர் ஆகியோர் செய்துள்ளனர்.
அந்தப் பணம் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஹாடி அவாங்கிடம் தரப்பட்டதாக சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் வெளிப்படுத்திய பின்னர், ஹாடி அவாங் அவர் மீது வழக்கைத் தாக்கல் செய்தார்.
எனினும், அதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காணப்பட்டு, 2019இல் ஹாடி அவருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாகத் தந்ததாகச் செய்தி வெளியானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles