28.8 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

மூடா கட்சியைப் பக்காத்தானில் சேர்த்துக் கொள்வதால் லாபமே!

🔥 Views : 22
👁 Reading Now : 53

மூடா கட்சியைப் பக்காத்தானில் சேர்த்துக் கொள்வதால் லாபமே என்றும் அதனை ஒதுக்கித் தள்ளுவதால், பக்காத்தானுக்கான வாக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக நுசாந்தாரா கல்விக் கழகத்தின் டாக்டர் அஸ்மி ஹசான் குறிப்பிட்டார்.
ஜொகூர் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் சைட் சாடிக் சைட் அப்து ரஹ்மான் பிகேஆருக்கு எதிர்ப்பு நிலை எடுத்து, அடாவடித் தனமாகப் பேசியது பிகேஆர் தலைவர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், அக்கட்சியைப் பக்காத்தானுடன் சேர்க்கக் கூடாதென்ற எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கால சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான முடிவை எடுக்க வேண்டுமென்றும், மூடாவும் இறங்கி வந்து 15 தொகுதிகளைக் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அஸ்மி ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles