
4 ஆண்டுகளுக்கு முன்னர் நாணய மாற்றும் வியாபாரியைக் கடத்திய ஐவருக்கு வாழ்நாள் சிறையும் 10 பிரம்படியும் தர உயர்நீதிமன்ற நீதிபதி Akhtar Tahir (அக்தார் தாஹிர்) உத்தரவிட்டார்.
டி.சஷிதரன்(38), ஏ.அசோகன்(39), முகமட் சுல்தான் அமாட் காபிர் (43), ஓங் சான் சியா(37), யியோ ஷி மிங்(33) ஆகியோர் குற்றத்தின் மீது தகுந்த சந்தேகத்தை எழுப்ப முடியாமல் போனதால், அவர்கள் கைது செய்யப்பட்ட 2016 அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பாகியுள்ளது.
2016 செப்டம்பர் 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அவர்கள் நாணய மாற்றும் வியாபரி Hawazanajmi K Shahapudeen (ஹவாஸனாஜ்மி கே. ஷாஹாபுடினை) கடத்தி 3 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம் கோரியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
