34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

குடிநுழைவுத் துறையின் புதிய விதிமுறை குழப்பத்தை எற்படுத்துகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 45

அந்நியத் தொழிலாளர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் 6 மணி நேரத்திற்குள் அவர்களை முதலாளிகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற குடிநுழைவுத் துறையின் புதிய விதிமுறை முதலாளிமார்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud (கைருல் சைமி டாவுட்டின்) இந்த விதிமுறை முதலாளிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் விமான நிலையத்தில் யார் வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வரையறுக்கப்டவில்லை என்று மலேசிய முதலாளிமார் சங்கத்தின் (எம்இஎஃப்) தலைவர் சைட் ஹுசேய்ன் சைட் ஹுஸ்மான் தெரிவித்தார்.
6 மணி நேரத்திற்குள் அந்நியத் தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவர்களைச் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறுவதால், தொழிலாளர்களைத் தருவிக்க நாங்கள் செலவிட்ட பணத்திற்கு யார் பதில் சொல்வது என அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles