25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ரஷிய படைகள் பின் வாங்கின: முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்

🔥 Views : 9
👁 Reading Now : 23

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும். உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன. உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. அதன்பின் சில பகுதிகள் ரஷியாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன. அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷிய படைகள் பின் வாங்கின. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும். அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கிடையே ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரான செச்சினியா பிராந்திய தலைவர் கதிரோவ் கூறும்போது, “எனது தனிப்பட்ட கருத்துப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்து வதை ரஷியா பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles