25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வாடகைக் காரோட்டிகளுக்கு ரிம. 500 உதவி நிதி வழங்குக

🔥 Views : 6
👁 Reading Now : 26

பணவீக்க காலத்தில் வாழ்க்கையை ஓட்ட மிகவும் சிரமப்படும் மின்னியல் அழைப்பு டாக்சியோட்டிகள் உட்பட அனைத்து வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கும் ஒரு முறைக்கான உதவி நிதியாக ரிம. 500யை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென அதற்கான அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
Gabungan Teksi Se Malaysia (காபுங்கான் டெக்சி செ-மலேசியா(ஜிடிஎட்எம்) என்ற சங்கத்தின் தலைவர் Kamarudin Mohd Husein (கமாருடின் முகமட் ஹுசேய்ன்) கூறும்போது, கடந்த ஈராண்டுகளாக கோவிட்-19இன் தாக்கத்தினாலும் பொருள் விலையேற்றத்தினாலும் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
பயணிகள் இன்றி தங்களது தொழிலைச் செய்ய முடியாமல் மிகவும் துன்பப்பட்ட நிலையில், அந்த உதவி நிதி தங்களுக்கு அளிக்கப்பட்டால் அது பேருதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles