30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நோயினால் அவதியுறும் நவீன்குமாருக்கு பினாங்கு மஇகா இளைஞர் உதவி!

🔥 Views : 6
👁 Reading Now : 27

சிறு வயது முதல் மூச்சு திணறல் நோயினால் அவதியுற்று வரும் தாமான் பாகான் பட்டர்வொர்த்தைச் சேர்ந்த நவீன்குமாருக்கு பினாங்கு மஇகா இளைஞர் பகுதியின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
தமது 14 ஆவது வயதில் இருதய சிகிச்சையை மேற்கொண்டு சிறிது காலம் நலமுடன் இருந்த அவர்,மீண்டும் அந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார்.
எந்தவொரு வேலையும் செய்ய முடியாமல் இருந்து வரும் இவருக்கு மனைவியும்,மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
தற்சமயம் குடும்பத்தில் நிரந்தர வருமானம் எதுவும் இல்லாததால்,பலகாரங்கள் விற்பனை செய்ய ஆர்வம் கொண்டுள்ள அவரது மனைவிக்கு மாநில இளைஞர் பகுதி துணைத் தலைவர் குமார் மனோகரன் 1500 வெள்ளியை வழங்கினார்.
இந்த சிறு உதவி அவர் மனைவியின் வியாபாரத்துக்கு உதவியாக இருக்கும் என அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles