26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

எதிர்க்கட்சிகளோடு தேர்தல் உடன்பாட்டை வைக்க பக்காத்தான் இணக்கம்

🔥 Views : 7
👁 Reading Now : 38

பக்காத்தானுடன் ஒத்துழைக்க விரும்பும் எதிர்க்கட்சிகளோடு கலந்தாலோசனை செய்ய தாம் தயாராக இருப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஊழலையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் எதிர்ப்பதோடு, இனவாதத்தை முன்னெடுக்காமல், சமய தீவிரவாதத்தை வெறுக்கும், எதிர்க்கும் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ள பரிசீலிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெஜுவாங்கின் தலைவர் துன் மகாதீர், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஆகியோரும் விரும்பினால் தமது தலைமையகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மகாதீருடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்று உறுதியாகக் கூறியிருந்த அன்வார், பொதுத்தேர்தலிந் ஆகக் கடைசியான நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளோடு ஒத்துழைக்க சம்மதித்துள்ளது பெரிய மாற்றம் என வர்ணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles