31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இந்தியப் பெண் கழுத்து நெரித்து கொலை

🔥 Views : 8
👁 Reading Now : 40

பெக்கான் தம்புன் சாலை சந்திப்பு சமிக்ஞை எச்சரிக்கை விளக்கிற்கு அருகே கால்வாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவ பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டதால் அவர் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. பேரா போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுஸ்ரி ஹசான் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று இரவு மணி 7 அளவில் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அந்த பெண்ணின் உடல்மீது சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதால் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக முகமட் யுஸ்ரி கூறினார்.
பல்வேறு கோணங்களில் அந்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles