30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

10 லட்சத்து 52, 145 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

🔥 Views : 9
👁 Reading Now : 36

நாட்டில் நேற்று வரை மொத்தம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 145 பேருக்கு இரண்டு முறை தடுப்பூசியை போடப்பட்டது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
18 லட்சத்து 60 ஆயிரத்து 864 பேருக்கு முதல் தடுப்பூசியை போடப்பட்டது.
இதன் வழி தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 13 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
சிலாங்கூரில் 139,427 பேர், சரவாவில் 109,934 பேர், பேராக்கில் 97,558 பேர், கோலாலம்பூரில் 94,399 பேர், ஜொகூரில் 92,231 பேர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றார் அவர்.

நேற்று வரை 49.9 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரத்து 91 பேர் தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிந்து கொண்டுள்ளனர். சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 32 லட்சத்து 23 ஆயிரத்து 832 பேர் இந்த பதிவினை செய்துள்ளனர் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles