24.7 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

கிரேப், ஃபூட் பண்டா விநியோகிப்பாளர்களுக்கு இபிஎப்- சொக்சோ தேவை

கிரேப் பூட் மற்றும் பண்டா உணவு விநியோகிப்பாளர்களுக்கும் சொக்ஸோ மற்றும் ஈபிஎஃப் செலுத்தப்பட வேண்டும் என்று அமானா இளைஞர் பிரிவு கோரிக்கை மனுவைத் தொடங்கியுள்ளது.
அமானா இளைஞர் அணி தலைவர், ஷஸ்னி முனீர் மொஹமட் கூறுகையில், இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் வேலைவாய்ப்புச் சட்டம் 1955-இன் கீழ், சட்டபடி ஊழியர்களாக கருதப்படவில்லை, அதற்குப் பதிலாக சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்.

“அவர்கள் சாலையில் ஆபத்துக்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், வேலை உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

உணவு விநியோகிக்கும்போது விபத்து நடந்தால், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் யார் இழப்பீடு வழங்குவார்கள்? முதுமையில் அவர்களின் வாழ்க்கைக்கு வேறு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? இந்த மக்களுக்கு அவர்களின் சேவைகள் மிக முக்கியமானவை என்றாலும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.
ஆகவே இவர்களுக்கு சொக்சோ மற்றும் இ பி எப் தேவை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles