30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கோத்தா கெமுனிங்கில் இலவச கோவிட்19 பரிசொதனை !மக்கள் அதிகளவில் பங்கேற்பு

🔥 Views : 9
👁 Reading Now : 62

To listen this news in Tamil, Please click play button

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் தலைமையில் நடைபெற்ற இலவச மருத்துவப் பரிசோதனையில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் அதிகமான மக்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கணபதி ராவ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா உட்பட சுகாதார அதிகாரிகளும் இந்த இலவச மருத்துவ பரிசோதனை பார்வையிட்டனர். மாநில மக்கள் நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் வாழ மாநிலம் முழுவதும் இலவச கோவிட்19 பரிசோதனை நடத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
இந்த இலவச மருத்துவ பரிசோதனை வெற்றி பெற உதவிய கவுன்சிலர்கள் யுவராஜா, ராயுடு , கிராமத் தலைவர்கள் கோபி, பதமாநாயன் மற்றும் தொண்டுழியப் படையினர் மற்றும் செம்பிறை சங்க உறுப்பினர்களுக்கும் கணபதி ராவ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

இதனிடையே இந்த இலவச மருத்துவ பரிசோதனையை கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சியின் தேசியத் தலைவருமான முகமட் சாபு நேரில்வந்து பார்வையிட்டு பொதுமக்களை பாராட்டினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles