
பாகான் டத்தோ தொகுதியில் உள்ள பாகான் பாசிரில், அமாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக போட்டியிடும் ஷம்சுல் இஸ்கண்டாருக்கு ஆதரவாகப் பரப்புரை நிகழ்த்தப்பட்டது.
இதற்கு முன்னர், அதே இடத்தில் ஸாஹிட் நடத்திய பரப்புரையில் கலந்து கொண்டோரை விட இக்கூட்டத்தில் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய நூருல் இஸ்ஸா அன்வார், இத்தொகுதியில் போட்டியிடும் இஸ்காண்டார் இதற்கு முன்னர் நடத்த பொதுத்தேர்தல்களில் பல அம்னோ தலைவர்களை வெற்றி கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இஸ்கண்டர், ஊழலில் திளைத்திருக்கும் ஸாஹிட் ஹமிடியை வென்று, வெற்றி வீரராக வலம் வருவார் என்று குறிப்பிட்டார்.
ஸாஹிட் ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவே தேர்தலை முன்கூட்டியே நடத்த நெருக்குதல் கொடுத்தாகவும், அவர் போன்ற ஊழல்வாதிகள் தலையெடுக்காமல் செய்வது பாகான் டத்தோ வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது என்று நூருல் குறிப்பிட்டார்.
