
ஷா ஆலம், செக்சன் 18-இல் அமைந்துள்ள அருள்மிகு படபத்ர காளியம்மன் ஆலயம் தற்போது அமைந்துள்ள அதே இடத்தில் நிலைநிறுத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதற்கு முன் அணி வித்திருந் தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை அந்த ஆலயத்திற்கே வழங்கியுள்ளார்.
அதேவேளை, அந்த இடத்தின் உரிமையாளரான கே.பி.ஜே. நிபுணத்துவ மருத்துவமனை நிறுவனத்திற்கு மாற்று நிலத்தை வழங்கவும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி பாக்காத்தான் வேட்பாளருமான
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்பாடு செய்துள்ளார் என்று மந்திரி பெசாரின் இந்திய சமூக சிறப்பு பிரதிநிதியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.
