26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

பக்காத்தான் வெற்றி பெற்றால் மலிவு விலை அடுக்ககங்களின் பராமரிப்பை அரசாங்கம் ஏற்கும்

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைத்தால் மலிவு விலை அடுக்குமாடி வீடுகளின் பராமரிப்பு பணிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் . மலிவு விலை அடுக்ககங்களின் பராமரிப்பு வேலைகள் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வீடுகளின் கூட்டு நிர்வாக அமைப்புகள் அல்லது நிர்வாக குழுக்களின் பொறுப்பாக இருந்துவருவதாக புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran தெரிவித்தார். எனினும் மலிவு விலை அடுக்ககங்களில் குடியிருப்போர் தங்களது சொந்த நிர்வாக குழுக்களை அமைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறினார். குடியிருப்புவாசிகளில் பெரும்பாலோர் தங்களது ஆண்டுக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. அந்த கூட்டங்களில் கலந்துகொள்ளாதவர்கள் நிர்வாக குழுக்களில் இடம்பெறுவதில்லை என்று Rajiv Rishyakaran தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles