26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

சிலாங்கூரில் 20 தொகுதிகளை பக்காத்தான் கைப்பற்றும் ; மந்திரிபுசார் நம்பிக்கை

15 – ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் உள்ள 22 நாடாளுமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளை கைப்பற்ற முடியும் என மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார். பிரச்சாரம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அடுத்து வரும் சில நாட்களில் பிரச்சாரத்தை மேலும் திவிரப்படுத்த வேண்டியிருப்பதாகவும் கோம்பாக் நாடாளுமன்றத்திற்கான பி.கே.ஆர் கட்சியின் வேட்பாளருமான அமிருடின் ஷாரி கூறினார். அடுத்து வரும் 10 நாட்களில் மேலும் அதிகமாக ஆதரவை திரட்ட முடியும். வாக்களிப்பு தினத்திற்கு முன் பக்காத்தான் ஹராப்பானுக்கான ஆதரவை மேலும் தீவரப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். இதனிடையே கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் அஸ்மின் அலியுடனான தமது போட்டி குறித்து வினவப்பட்டபோது மக்களின் ஆதரவு வரவேற்பு அளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த தொகுதியில் தாம் போட்டியிடுவதை பலர் வரவேற்கின்றனர். கோம்பாக் தொகுதியை மீட்டு பக்காத்தான் ஹராப்பான் கையில் ஒப்படைப்பேன் என்றும் அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles