
பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்றும் துன் மகாதீரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் கூறி வருகின்றனர்.
அம்மாதிரியான ஒப்பந்தம் இருக்குமேயானால், அதன் ஆதாரத்தை அவர்கள் இருவரும் நிரூபிக்க வேண்டுமென அன்வார் இப்ராஹிம் அதிரடி கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சியினர் மீது சேற்றை வாரி இறைப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அந்த இருவரும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லையென்றும் நேர்மையற்றவர் களாகவும் இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
இந்த இருவரும் கூறுவதை மக்கள் நம்ப வேண்டாமென்றும் அவர்களின் நடவடிக்கையில் இன, சமயவாதம் தலைதூக்கி இருப்பதால் அவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டுமெனவும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
