26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

14 மில்லியன் ரிங்கிட் லிப்ரா ஊழல் பற்றி கைரி விளக்க வேண்டும்

இசிஎம் லிப்ரா நிறுவனம், அல்ட்ரா கிரானா, இளைஞர் விளையாட்டு அமைச்சு ஆகிய நிறுவனங்களில் நடந்த கோடிக் கணக்கான ரிங்கிட் மோசடி சம்பந்தமாக சுங்கை பூலோவின் அம்னோ வேட்பாளர் கைரி ஜமாலுடின் விளக்க வேண்டுமென பிகேஆர் வேட்பாளர் ரமணன் கேட்டுக் கொண்டார்.
கைரி, துன் அப்துல்லா படாவியின் மருமகன் என்றும், வேலையற்ற மிகவும் செல்வந்தரான நபராக அவர் இருந்ததாகவும் ரமணன் குறிப்பிட்டார்.
2005இல் இசிஎம் நிறுவனத்தின் 13 மில்லியன் பெறுமான பங்குகளை 9.2 மில்லியன் ரிங்கிட் விலையில் வாங்கியது அப்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அவர் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது நடந்த 10.7 கோடி ரிங்கிட் ஊழல், அல்ட்ரா கிரானா நிறுவனத்தில் நடந்த 7 கோடி ரிங்கிட் ஊழல் போன்றவற்றிற்கான விளக்கத்தை கைரி பொது மக்களுக்கு விளக்க வேண்டுமென ரமணன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles