
பொதுத்தேர்தலில் வேறொரு கட்சியின் சார்பில் போட்டியிடும் Shahidan Kassim (ஷஹிடான் காசிம்) உட்பட 3 தலைவர்கள் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆராவ் எம்பி ஷஹிடான் காசிம், பாடாங் பெசார் எம்பி Zahidi Zainul Abidin (ஸாஹிடி அபிடின்), மாரான் எம்பி Ismail Abd Muttalib (இஸ்மாயில் அப்து முத்தாலிப்) ஆகியோரே நீக்கப்பட்டவர்களாவர்.
கோலா பெர்லிஸ் மாநிலத் தொகுதியில் போட்டியிடும் Azhar Ahmad (அஸார் அமாட்)டின் கட்சி உறுப்பியம் ரத்து செய்யப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளர் Ahmad Maslan (அமாட் மஸ்லான்) தெரிவித்தார்.
ஷஹிடான், ஸாஹிடி ஆகியோருக்கு கட்சி தொகுதியை வழங்கவில்லை. எனவே, ஷாஹிடானும் அஷாரும் பெரிக்காத்தான் நேஷானலின் சார்பில் தங்களது தொகுதியிலும் ஷாஹிடி தித்தி திங்கி சட்டமன்றத் தொகுதியிலும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது, மேற்கண்ட தலைவர்களோடு உடன்சென்ற சில அம்னோ உறுப்பினர்களின் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
