
2015 செப்டம்பர் 4ஆம் தேதி சுபாங் ஜெயா, ஜாலான் டுத்தாமாஸ் ராயா, செந்தூலில் அரசு வழக்கறிஞர் Kevin Morais (கெவின் மொரைய்ஸை) கொலை செய்து, உடலை சிமெண்டு தோம்பில் வைத்து, பூசி மெழுகி, அதனைக் குட்டையில் வீசி எறிந்த அறுவருக்கு 2020 ஜூலை 10 ஆம் தேதி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்தக் கொலையானது அப்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அத்தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட ராணுவ மருத்துவர் குணசேகரன், வட்டித் தொழில் செய்த எஸ்.ஆர். சந்திரன், வேலையில்லாதவர்களான ஆர். தினேஸ்வரன், ஏ.கே. தினேஸ் குமார், எம். விஸ்வநாத், எஸ். நிமலன் ஆகியோர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர்.
அந்த மேல் முறையீடு அடுத்தாண்டு மார்ச் 3 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



