
ஒராண்டு காலம் பிரதமராக இருந்த பெரிக்காத்தான் நேஷனலின் முஹிடின் யாசின், நாட்டில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த 50,000 கோடி ரிங்கிட்டை செலவு செய்ததாகக் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பெரும் தொகை. மக்களின் வரிப் பணம் என்பதால் எதற்கும் முறையான கணக்கு வேண்டும் என மலாக்கா பிகேஆர் தலைவர் Adli shahari (அட்லி ஷஹாரி) குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஆட்சி அமைத்தால், மேற்கண்ட செலவினத்தை ஆய்வு செய்து, முறைகேடு செய்தோரைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.



