
ரெம்பாவ் தொகுதியில் 3 முறை எம்பியாக இருந்த கைரி ஜமாலுடின், பகீரதப் போராட்டத்திற்குப் பின்னர் இத்தேர்தலில் சுங்கை பூலோவில் போட்டியிடுகிறார்.
வருங்காலத்தில் பிரதமராகத் தாம் வருவது உறுதி என்று கூறி மற்ற கட்சிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள்ளார். இந்நிலையில், கட்சித் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி அவரை வளர விடாமல் தடுக்கும் வேளையில் ஈடுபட்டிக்கும் நிலையில், பராமரிப்புப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கைரிக்கு ஆதரவாக நடந்து கொள்வது கட்சியினரிடையே அணுக்கமாக நோக்கப்படுகிறது.
சுங்கை பூலோ தொகுதியின் வெற்றியை அடுத்து, இன்னும் 6 மாத காலத்தில் நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில் கைரி ஜமாலுடின் தலைவர் பதவிக்கு ஸாஹிட் ஹமிடியை எதிர்த்துப் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



