
மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை பிரச்சினையைத் தீர்க்க புதிய அரசு தேவையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென பாலின சமத்துவத்திற்கான கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கண்ட குழு நினைவுறுத்தியது.
மலேசிய தந்தைமார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பான குடியுரிமை வழங்கப்படுவது போலவே, மலேசிய தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே மாதிரியான குடியுரிமை வழங்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென மேற்கண்ட நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.



