31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

அன்வாருக்கு அபரிமிதமான வாழ்த்துகள் குவிகின்றன

🔥 Views : 6
👁 Reading Now : 40

அன்வார் இப்ராஹிம் 10ஆவது பிரதமராக நியமிக்கப்படவிருப்பதை பேரரசர் அறிவித்த பின்னர், பக்காத்தான் தலைவர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அன்வார் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் அதற்கு அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருப்பதாக Lim Guan Eng (லிம் குவான் எங்) தெரிவித்தார்.
இது மக்களின் தேர்வாகும் என்றும் அன்வார் பிரதமர் பதவியில் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santhiago தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, நாட்டு மக்களை ஒன்றிணைத்து மேம்பாட்டுக்கு உதவுவார் என்றும், ஈப்போ பாராட் எம்பி எம். குலசேகரன், அன்வார் மக்களின் தலைவர் என்றும் நாட்டை சரியான பாதையில் வழி நடத்துவார் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், மூடா தலைவர் Said Sadiq said Abdul Rahman (சைட் சாடிக் சைட் அப்துல்) ரஹ்மான், அன்வாரின் ஆட்சியில் மலேசியா உயர்ந்த இடத்தை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles