
பொதுத்தேர்தலில் மற்றவர்களின் அடையாளக் கார்டைப் பயன்படுத்தி வாக்களிக்க முனைந்த 33 பேர் மீது போலீஸில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.
அதில் 28 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் பினாங்கு போலீஸ் தலைவர் Shuhaily Zain (ஸுஹைலி ஸின்) தெரிவித்தார்.
தேர்தல் சம்பந்தமாகப் பெறப்பட்ட 76 புகார்களில் மேற்கண்ட புகார்களும் அடங்கும் என்றும் அதில் 4 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல்வாதி ஒருவர் பரப்புரையில் இன, சமய விவகாரத்தை எழுப்பியது சம்பந்தமாக 7 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்



