
பாடாங் செராய் நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கறிஞர் Sofee Razak (சோஃபீ ரசாக்) போட்டியிடுவார் என அமானா துணைத் தலைவர் Salahuddin Ayub (சலாஹுடின் அயூப்) தெரிவித்தார்.
கெடா பிகேஆர் செயலாளரான சோஃபீ ரசாக் 14ஆவது பொதுத்தேர்தலில் கோலா கெட்டில் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தவராவார்.
சலாஹுடின் பேசும்போது, நாட்டின் 10ஆவது பிரதமராவதற்கு சிக்கலை எதிர்நோக்கி வரும் அன்வார் இப்ராஹிமின் கைகளைப் பலப்படுத்த, சோஃபீ இத்தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமாகும் என்று குறிப்பிட்டார்.



