33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பேரரசர் பரிந்துரைக்குக் கட்டுப்படுவோம் – ஜிபிஎஸ் தலைவர்கள் சம்மதம்

🔥 Views : 6
👁 Reading Now : 35
பேரரசர் பரிந்துரைத்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் சேர காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) நடவடிக்கை எடுக்கும் என அதில் உறுப்பியம் பெற்றுள்ள பார்ட்டி ரக்யாட் சரவாக்(பி ஆர்எஸ்) தலைவர் Joseph Salang Gandum (ஜோசப் சாலாங் கான்டும்) அறிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தைப் பேரரசர் விரும்பினால், அதற்கு நாங்களும் சம்மதிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
யார் பிரதமராக வேண்டுமென்ற முடிவை கூட்டணியின் மேல்மட்டத் தலைவர்களிடமே விட்டு விடுவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பேரரசரைச் சந்தித்த ஜிபி எஸ்ஸின் மூத்த உதவித் தலைவரும் பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்துவின் உதவித் தலைவருமான ஃபாடிலா யூசோஃப், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்க  ஆதரவு தெரிவித்ததை மீட்டுக் கொள்வதாகத் தெரிவிதிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles