
கிழக்குக் கரை ரயில் திட்டத்தின்(இசிஆர்எல்) மொத்த செலவினம் 7,496 கோடி ரிங்கிட் என்றும் அதில் கட்டுமானத் செலவு 5,027 கோடியாகவும் மற்ற செலவுகள் 2,469 கோடி ரிங்கிட் எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதர செலவுகளில் கட்டுமான காலத்தில் கடனுக்கான வட்டித் தொகை, நில ஆர்ஜிதம், தளவாடங்களை மாற்றுவது மற்றும் இணைப்புக்கான செலவுகளாகும்.
2017இல் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது அதன் செலவு 8,597 கோடி ரிங்கிட்டாக இருந்ததாகவும் தற்போது அத்திட்டத்தில் பெரிய மாற்றம் எதுவும் செய்யாமல் 1,100 கோடி ரிங்கிட் குறைக்கப்பட்டுள்ளது.



