
சொஸ்மா சட்டம் அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஊக்குவித்து, தடுத்து வைக்கப்பட்டோரின் வாழ்க்கையைச் சிதைத்திருப்பதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அதற்கான காரணத்தைச் சொல்லாமலும் நீதிமன்றத்தில் ஆஜராக்காமலும், குற்றம் சாட்டப்படாமலும் நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவது அநியாயம், அராஜகம் என்றும் கிட் சியாங் குற்றம் சாட்டினார்.
எனவே, இந்தச் சொஸ்மா சட்டத்தில் தேவையான திருத்தம் செய்த முந்தைய ஆட்சியின் முயற்சியை ஒற்றுமை அரசாங்கம் தொடரச் செய்து, இச்சட்டத்தின் கடுமையைக் குறைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



