
அண்மையில் மக்களவை துணை சபாநாயகர் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் எம்பிக்கள் இருவர் வாக்களிக்காததால், அரசின் வேட்பாளர்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தேசிய முன்னணியின் ரம்லி முகமட் நோருக்கு 148 வாக்குகளும் லானாங் தொகுதி பக்காத்தான் வேட்பாளர் அஸிஸ் லாவிற்கு 146 வாக்குகளும் கிடைத்தன.
அந்த வாக்கெடுப்பில் மஇகாவின் துணைத் தலைவர் எம்> சரவணன் வாக்களிக்கவில்லை என்று தெரியவருகிறது. அச்சமயத்தில் தாம் மதிய உணவுக்காக வெளியில் சென்றிருந்ததால் வாக்களிக்கவில்லை என்றும், திரும்பி வந்து பார்க்கும்போது வாக்களிப்பு முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது எதேச்சையாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்பது புரியவில்லை!



