
நாட்டின் பிரதமர் என்ற வகையில் எதிர்க்கட்சிகளின் கீழுள்ள மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களின் மேம்பாட்டில் மத்திய அரசு முழு கவனத்தைச் செலுத்தும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி கூறினார்.
கிளந்தானின் வெள்ள நிலைமையைக் கண்டறியச் சென்ற அவர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறியதோடு, தெங்கு பாங்லிமா ராஜா இடைநிலைப் பள்ளியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
கிளந்தான் மாநில வளர்சிக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மந்திரி பெசார் Ahmad Yakob (அமாட் யாக்கோப்)புடன் கலந்தாய்வு நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



