30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பேறு குறைந்தவர்கள் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்யத் தடை ஏன்?

🔥 Views : 36
👁 Reading Now : 27

பெட்டாலிங் ஜெயா இந்து ஆலயம் ஒன்றில் பேறு குறைந்த தமது சகோதரியின் கணவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு சாமி தரிசனம் செய்ய ஆலய நிர்வாகம் அனுமதிக்காததை விக்கி குமாரசாமி எனும் மாது ஆலயத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அவரின் ஆவேசம் நிறைந்த வீடியோ பதிவு வைராலாகிப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த ஆலயத்தின் ஆலோசகரும் அதன் தலைவருமான சமூக ஆர்வலர் அருண் துரைசாமி தந்த விளக்கம் மன நிறைவைத் தரவில்லை என்றும் விக்கி தெரிவித்தார்.
பேறு குறைந்தவர்களை நடத்தும் விதம் சரியில்லை என்றும் மற்ற சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களில் இம்மாதிரியான பாகுபாடு காட்டப்படவில்லை என்றும் இதே ஆலையத்தின் பாகுபாட்டை எதிர்த்து, 2014ஆம் ஆண்டு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும் விக்கி சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles