
அடுத்தாண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார நலிவினை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது பரந்த அனுபவத்தைப் பயன்படுத்தி சமாளிக்க அவகாசம் தர வேண்டுமென தற்காப்பு துணையமைச்சர் அட்லி ஸஹாரி நம்பிக்கை தெரிவித்தார்.
அன்வாரினால் நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல முடியும் என்றும் மக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தக்க ஆதரவை வெளிப்படுத்த வேண்டுமென்று பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்குக் கருணைத் தொகை வழங்கிய நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
அன்வார் நல்ல முறையில் நாட்டை வழிநடத்த தகுதியற்றவர் என நேற்று முன்தினம் மகாதீர் கூறியதை அடுத்து, அட்லி ஸஹாரி மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.



