33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கோலாலம்பூர் கேஎல் மெனாரா கோபுரம் ரகசியமாக விற்கப்பட்டது ஏன்?

🔥 Views : 5
👁 Reading Now : 64

கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கி வந்த கேஎல் மெனாரா கோபுரம் (Menara KL) தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவரம் மர்மமாக வைக்கப்பட்டு, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது வரை டெலிகோம் மலேசியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் கோபுரம் Hodrop Shope (ஹொட்ரோப் ஷோப்) நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருப்பதாகவும் அது முஹிடின் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அண்மைய கால ஆட்சி காலத்தில் விற்கப்பட்டிருப்பது தெரிகிறது. அது திவாலாக விருக்கும் ஒரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டதில் பலர் லாபம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கும் வேளையில், அது பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியிருப்பது கேலிக் கூத்து என்றும் விமர்சிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles