
பத்தாங் காலி, ஃபாதர்ஸ் ஓர்கேனிக் ஃபார்ம் முகாமில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பந்தமான விசாரணை அறிக்கை 90 விழுக்காடு பூர்த்தியடைந்து விட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Arjunaidi Mohd (அர்ஜுனைடி முகமட்) தெரிவித்தார்.
விசாரணையில் நிலச்சரிவு நிகழ்ந்த இடம், மீட்புப் பணியாளர்களின் நடவடிக்கை, மருத்துவமனை பரிசோதனை அறிக்கை முதலியவை அதில் ஆராயப்பட்டன.
பாதிக்கப்பட்டோர், சாட்சிகள், குடும்பங்கள், முகாமின் நடத்துநர், ஊழியர்கள் ஆகிய 77 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நிலச்சரிவில் 20 வாகனங்கள் புதையுண்டதாகவும் அதன் உரிமையாளர்களின் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. வாகனங்கள் ஆழத்தில் புதையுண்டு இருப்பதால், அவற்றை மீட்க முடியவில்லை என்றும் அர்ஜுனைடி தெரிவித்தார்.



