33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பயண தாமதத்திற்கு பாத்திக் ஏர் மன்னிப்பு கேட்டது

🔥 Views : 7
👁 Reading Now : 22

கடந்த வெள்ளிக்கிழமை பாத்திக் ஏர் (மலிண்டோ) விமானப் பயணங்கள் 8 மணி நேரம் வரை தாமதமானதால் நூற்றுக் கணக்கான பயணிகள் பயணத்தைத் தொடர முடியாமல், கோலாலம்பூர் விமான நிலைய பெஞ்சுகளில் படுத்து உறங்கியது காணப்பட்டது.
பலர் இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
அது பற்றி பாத்திக் ஏர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்த தாமதம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதாகவும் அதற்காகத் தாங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் பயண தாமதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் ஆனால், ஹோட்டல் அறைகள் கிடைக்காததால் அவர்கள் அன்றிரவுக்குத் தங்க இடம் வழங்கப்பட முடியாமல் போனதாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவருக்கும் தகுந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, இனி இம்மாதிரிய பிரச்சினை எழாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது உறுதி கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles