
பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் நிலவிய பதவிப் போராட்டத்தை அடுத்து, அதன் தலைவர் என மார் தட்டிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஸுரைடா உட்பட 11 மேல்மட்டத் தலைவர்களை அக்கட்சியின் தலைமைத்துவம் நீக்கியுள்ளது.
அவரோடு உதவித் தலைவர்களான Rahimah Majid (ரஹிமா மஜிட்), சதிஸ்குமார் கோவிந்தராஜு, Mohd Saiful Bahari Sahari (முகமட் சைபுல் பஹாரி சஹாரி), இளைஞர் பிரிவுத் தலைவர் Naim Bundage (நாய்ம் புருண்டேஜ், உதவித் தலைவர் Hanizah Mohd Talha (ஹனிஸா முகமட் தல்ஹா), மகளிர் தலைவி டாக்டர் Doroya Alwi (டொரோயா அல்வி, தலைமைச் செயலாளர் Nor Hizwan Amad (நோர் ஹிஸ்வான் அமாட்), தகவல் பிரிவுத் தலைவர் Zakaria Abdul Rahim (ஸக்கரியா அப்துல் ரஹிம்) ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
அக்கட்சியில் தலைவர் ஜுலாவ் எம்பி Larry Sng (லேர்ரி சிங்கிற்கும்) ஸுரைடா கமாருடினுக்கும் இடையே ஏற்பட்ட பதவிப் போராட்டத்தினால், இந்தப் பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.



