
அரசு மருத்துவமனைகளில் ஆபத்து அவசர நிலை நோயாளிகள் வரிசைக் கட்டி நிற்கும்போது, அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் உடனடி சிகிச்சை வழங்கப்படுவதாக செர்டாங் மருத்துவர் ஒருவர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
பொதுவாக, இது எல்லா அரசு மருத்துவமனைகளிலும் நடப்பது வழக்க மென்றாலும், அம்மாதிரியான நடவடிக்கை ஏதும் நடக்கவில்லை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருப்பது உண்மையை மறைக்கும் செயலென வர்ணிக்கப்படுகிறது.
பிரபலமானவர்களுக்கு முதலில் சிகிச்சை வழங்குவதை விட, ஆபாத்தான, கடுமையான நிலையில் கொண்டுவரப்படும் எந்த நோயாளிக்கும் உடனடி சிகிச்சை வழங்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் அதற்கான முழு விளக்கத்தைத் தர முன்வர வேண்டுமென டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.



