
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு ஆற்றல் இல்லையென கூறியிருக்கும் துன் மகாதீரின் கூற்றை முற்றாக உதாசீனம் செய்ய வேண்டுமென நஸ்ரி அஸிஸும் சார்ல்ஸ் சந்தியாகோவும் குறிப்பிட்டுள்ளனர்.
லங்காவி தேர்தலில் தோற்று, வைப்புத் தொகையையும் இழந்த அவர், எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, இப்போது அன்வார் செயல்படவில்லை என்று கூறுவது அறிவீனம் என நஸ்ரி குறிப்பிட்டார்.
அன்வாருக்கு எதிராக மகாதீர் எப்போதுமே கருத்தைத் தெரிவிப்பது வாடிக்கையானது என்றும் நாடு எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளுக்குத் அன்வார் தரும் முன்னுரிமை சரியான பாதையில் செல்வதாக சந்தியாகோ குறிப்பிட்டார்.
மகாதீரின் கருத்துகளைப் புறக்கணித்து, அன்வார் தமது காரியங்களில் கண்ணாக இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



